சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில்
திருக்கார்த்திகை 6ஆம் திருநாள் விழா சிறப்பாக நடைபெற்றது
காவிரி தாயின் மடியில் நடுநாயகமாக விளங்கும் திருவேரகம் எனும் சுவாமிமலை, திருமுருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகப் போற்றப்படுகிறது. தந்தை சிவபெருமானுக்கு “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருநாதனாக, வேலும் மயிலும் துணையாக திருமுருகப் பெருமான் எழுந்தருளியுள்ள இந்தத் திருத்தலத்தில், திருக்கார்த்திகை 6ஆம் திருநாள் அபிஷேக ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.
குரோதி ஆண்டு, கார்த்திகை மாதம் 25ஆம் தேதி (30.11.2025) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் திருநாள் விழாவில், அருள்மிகு சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார ஆராதனைகள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன. உடையார் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து வழிபட்டனர். விழாவைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் உடையார் திருமண மண்டபத்தில் வழங்கப்பட்டது.
இவ்விழாவை முன்னிட்டு, சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் உடையார் சமூகம் சார்பில் நடைபெற்ற திருக்கார்த்திகை 6ஆம் திருநாள் பெருவிழா, சுவாமிமலை உடையார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது.
16.11.1867 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சுவாமிமலை உடையார் திருமண மண்டபம், மேலமாஞ்சேரி திரு. தாண்டப்ப உடையார், கொத்தங்குடி திரு. தாண்டவராய உடையார், கொத்தங்குடி திரு. சுப்பராய உடையார், கொந்தகை திரு. க. கனகப்ப உடையார், பொன்பேத்தி திரு. ராமசாமி உடையார், மருத்துவக்குடி திரு. வி. சடையப்ப உடையார் ஆகியோரால் நிறுவப்பட்டது.
158ஆம் ஆண்டு மகாசபை நிர்வாகிகள் தலைவர் திரு. கு. சந்தானகோபால்சாமி உடையார், செயலாளர் பொறியாளர் திரு. கே. காந்தி உடையார், பொருளாளர் திரு. நி. மோகன்தாஸ் உடையார், துணைத் தலைவர் திரு. சி. உதயகுமார் உடையார், துணைச் செயலாளர் திரு. சி. ஆதவன் உடையார், மண்டகப்படி செயலாளர் திரு. கொ.செ. பூபதி உடையார், மண்டகப்படி துணைச் செயலாளர் திரு. என். கே. இராமசாமி உடையார் ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
இந்த திருநாள் விழா, ஆன்மிக உணர்வையும் சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் பக்தி பெருக்குடன் இனிதே நடைபெற்றது.
0 comments:
Post a Comment