பெரம்பலூர்
தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் பெரம்பலூரையும் , திருச்சி, அரியலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களையும் இணைக்கும்
வகையில் ரயில் பாதை அமைக்க வேண்டும்
என்றார். இதன் மூலம் வேளாண்
விளைபொருட்களை அருகிலுள்ள நகரங்களுக்கு கொண்டு சென்று விற்க விவசாயிகளுக்கு வழி கிடைக்கும் என
குறிப்பிட்டார்.
திருச்சியில்
செய்தியாளர்களிடம் பாரிவேந்தர் M.P சனிக்கிழமை கூறியது:
மத்திய அரசு மாநிலங்களின் மீது
ஹிந்தி மொழி திணிப்பது என்பது
மாநில கொள்கைகளுக்கு எதிரானது. புதிய கல்விக் கொள்கை தமிழக மக்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதே தமிழக மக்களின் கருத்து என்பதால் அதை மறுத்து பேச
விரும்பவில்லை. மக்கள், புதிய கல்விக் கொள்கையை விரும்பவில்லை என்பதே உண்மை. தேசிய புலனாய்வு முகமை சோதனை குறித்து மத்திய அரசு தான் முடிவு
எடுக்க வேண்டும்.

பெரம்பலூர் பகுதியில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். மக்களின் தண்ணீர் பற்றாக் குறையை போக்குவதற்கு சொந்த செலவில் தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், முசிறியில் ஆழ்துளை கிணறு அமைத்து மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. பெரம்பலூர் விவசாயிகள் நிறைந்த தொகுதி என்பதால் அவர்கள் விளைவித்த பொருள்களை விற்பனை செய்யும் வரை அதனை பாதுகாப்பாக
வைக்க குளிர்பதன கிடங்குகள் அமைத்து தருவதற்கு மக்களவையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட்டில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு மக்களின் குறைகள் தொடர்ந்து கேட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். முன்னதாக, பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

0 comments:
Post a Comment