Sub Divisions are

Nathaman ,Malaiyaman-Udayar ,

Suruthiman-Moopanar and Nainar are Called Parkavakulam.

All Are Mostly Land Lords In their Villages with Agricultural Base.

In Tamilnadu Spread Over In All Districts.

Majority Lives In Tanjore,Perambalur,Salem,Ramnad,Pudukottai,Madurai & Trichy.

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வைகோ, பாரிவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்ப்பேராய விருது
 
எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா மற்றும் தினத்தந்தி முன்னாள் செய்தி ஆசிரியரும், எழுத்தாளருமான .சண்முகநாதன் எழுதிய தமிழ்நாடு-சங்ககாலம் முதல் செம்மொழி காலம் வரை என்ற புத்தக வெளியிட்டு விழா சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது.


 இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ப்பேராயம் புரவலரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தருமான பாரிவேந்தர் தலைமை தாங்கினார். தமிழ்ப்பேராயத்தின் தலைவர் மு.பொன்னவைக்கோ வரவேற்று பேசினார். மூத்த பத்திரிகையாளரும், நூலாசிரியருமான .சண்முகநாதன் முன்னிலை வகித்தார். .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
 
நிகழ்ச்சியில் தமிழ்நாடு-சங்ககாலம் முதல் செம்மொழி காலம் வரை என்ற புத்தகத்தை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் வெளியிட்டார். அதனை .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ பெற்றுக்கொண்டார்.
விருது

 அதனை தொடர்ந்து, 2014-ம் ஆண்டிற்கான தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கப்பட்டது. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது அஞ்ஞாடி என்ற நூலுக்காக பூமணிக்கு வழங்கப்பட்டது. ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது, சின்ன சின்ன வாக்கியங்கள் என்ற புத்தகத்திற்காக வெ.ஸ்ரீராமுவுக்கும், பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது, நீரிழிவுநோய் முதல் புற்றுநோய் வரை உணவு மருத்துவம் என்ற பிரிவில் டாக்டர் நரேந்திரனுக்கும் வழங்கப்பட்டது.

ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது இந்திரனுக்கும், முத்துத்தாண்டவர் தமிழிசை விருது தமிழிசை தவமணி மதுரை மாரியப்பசாமி வரலாறு புத்தகத்தை எழுதிய சோழநாடனுக்கும், வளர்தமிழ் விருது, தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு எழுதிய இளமாறனுக்கும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு பரிசு தொகையாக தலா ரூ.1½ லட்சம் வழங்கப்பட்டது.
வைகோ

 பரிதிமாற் கலைஞர் விருது பா.ரா.சுப்பிரமணியத்திற்கு வழங்கப்பட்டது. அவருக்கு பரிசு தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளர்களுக் கான பாரிவேந்தர் பைந்தமிழ் விருது அமெரிக்கா நாட்டை சேர்ந்த தமிழ் அறிஞர் ஜார்ஜ் ஹார்ட்க்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை அவர் சார்பாக மணிவண்ணன் என்பவர் பெற்றுக்கொண்டார். அவரிடம் பரிசு தொகை ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. விருதுகளை பாரிவேந்தர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வைகோ பேசும்போது, இயல், இசை, நாடகம் நம்முடன் கலந்தது. தமிழுடன் வளர்ந்தது. தமிழர்கள் பயன்படுத்திய யாழ் லண்டனில் இருக்கிறது. தமிழ் இலக்கியமும் வெளிநாட்டினரையும் கவர்ந்துள்ளது. ஜி.யு.போப் பெயரில் இங்கே விருது வழங்குகிறார்கள். ஜி.யு.போப், திருவாசகம் போல் எந்த நூலையும் பார்த்ததில்லை என்று கூறுகிறார். தமிழ் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது என்றார்.
இசைக்கல்லூரி

 எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் பேசும்போது, தமிழர்களுக்காக, தமிழுக்காக இந்த அமைப்பை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். மொத்தம் ரூ.20 லட்சம் அளவில் அதற்கான பரிசு தொகையை அறிவித்து இருக்கிறோம். பல்வேறு தமிழ் அறிஞர்களை நாங்கள் சிறப்பித்து இருக்கிறோம். பொதுவாக பல்கலைக்கழகம் என்றால் எல்லா பிரிவுகளும் இருக்க வேண்டும். நம்முடைய பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்லூரி இல்லாமல் இருந்தது. தற்போது அதையும் தொடங்கியிருக்கிறோம். நடிப்பு கல்லூரி உள்ளது. இனி வரும் காலத்தில் இசைக்கல்லூரியும் தொடங்கப்படும் என்றார்.

0 comments:

 
Top