Sub Divisions are

Nathaman ,Malaiyaman-Udayar ,

Suruthiman-Moopanar and Nainar are Called Parkavakulam.

All Are Mostly Land Lords In their Villages with Agricultural Base.

In Tamilnadu Spread Over In All Districts.

Majority Lives In Tanjore,Perambalur,Salem,Ramnad,Pudukottai,Madurai & Trichy.

பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அகில இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் கூறினார்.
கடந்த 2011ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலின் போது, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வந்தார். அப்போது, காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட அந்த கட்சியின் வேட்பாளர் ஆசைத்தம்பிக்கு வாக்குகள் கேட்டு தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் வாக்குகள் சேகரித்தார்.
இதற்கிடையில் முறையான அரசு அனுமதி பெறவில்லை என கூறி அதிகாரிகள் பாரிவேந்தர் செய்த பிரசாரத்திற்கு தடைவிதித்தனர். இது தொடர்பாக வேட்பாளர் ஆசைத்தம்பி உள்பட 9 பேர் மீது வழக்குபதிவு செய்து தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு சம்பந்தமாக நேற்று இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தேவகோட்டை கோர்ட்டில் ஆஜராகி குற்றபத்திரிகை நகலை பெற்று கொண்டார். இருநபர் ஜாமீனிலும் வந்தார். இவருக்காக வக்கீல் ராஜபாண்டி ஆஜரானார்.
பின்னர் பாரிவேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
எங்களது கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் கொள்கை அளவில் ஒத்துப்போவதால் நாங்கள் அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தோம். 42 சட்டமன்ற தொகுதிகளில் வாய்ப்புள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளை ஒதுக்கும்படி வற்புறுத்தினோம். பின்னர் 3 தொகுதிகளை கேட்டோம். அப்போது, நாங்கள் கேட்ட தொகுதிகளையே கூட்டணி கட்சிகளும் கேட்டதால் பாராளுமன்ற தேர்தலில் முதன்முறையாக, இப்போது போட்டியிடுகிறோம் என்பதால் ஒரு தொகுதியை பெற்றுக்கொண்டோம்.
பெரம்பலூர் தொகுதி எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் நான் (பாரிவேந்தர்) போட்டியிடுகிறேன். விரைவில் எங்கள் கட்சியின் சார்பில் அறிவிக்கப்படும். இந்திய அளவில் டெல்லியிலும், உத்தரபிரதேசத்திலும் போட்டியிடுகிறோம். தமிழகத்தில் திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்ததால் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது. எனவே எங்கள் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, மாநில பொதுச்செயலாளர் ஜெயசீலன், மாநில அமைப்பு செயலாளர் குழந்தைசாமி, மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி மற்றும் எஸ்.ஆர்.எம்.நிறுவன பொதுமேலாளர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

0 comments:

 
Top