Sub Divisions are

Nathaman ,Malaiyaman-Udayar ,

Suruthiman-Moopanar and Nainar are Called Parkavakulam.

All Are Mostly Land Lords In their Villages with Agricultural Base.

In Tamilnadu Spread Over In All Districts.

Majority Lives In Tanjore,Perambalur,Salem,Ramnad,Pudukottai,Madurai & Trichy.

நாட்டில் மனித சமூகம் தோன்றிய காலத்தில் மக்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தின் அடிப்படையில் வாழத் தொடங்கினர். அம்மக்கள், பிற் காலங்களில் குலத்தின் அடிப்படையில் அழைக்கப்பட்டனர். 
அக்காலத்தில்தான் குலம், வம்சம், கோத்திரம், சாதி என காலப்போக்கில் தோன்றின. இயற்கையோடு வாழ்ந்த காரணத்தினால் பார்க்கவன், பகலவன், வொய்யோன், சூரியன், ஞாயிறு என பல பெயர்களைக் கொண்டிருந்தனர், சூரிய குலத்தில் தோன்றியவரே பார்க்கவர்கள் என வரலாறு கூறுகிறது. 
பார்க்கவன் என்றால் சுக்கிரன் அவர் சூரியனின் புத்திரராவார். அவ்வியற்கை பெயராலேயே "பார்க்கவகுலம்" எனக் குலப்பெயர் உருவானது. 
கி.பி.7ம் நூற்றாண்டு மற்றும் கி.பி.8ம் நூற்றாண்டுகளில் நரசிங்க முனையரையரின் ஆட்சி காலமாகும். அதாவது கி.பி.680லிருந்து, கி.பி.680 வரை இருக்கலாம் என வரையறுக்க முடிகிறது. தொடர்ந்து 6 நூற்றாண்டுகள் பார்க்கவகுல அரசர்களின் ஆட்சி நடந்துள்ளதாக சரித்திரத்தில் காண முடிகிறது. 
கடையேழு வள்ளல்களில் 4 வள்ளல்கள் ( பாரிவள்ளல், திருமுடிக்காரி, அதிகன், நல்லி ) பார்க்கவகுலத்தில் தோன்றியவர்கள் என்பதனை சங்க இலக்கியம், கலிங்கத்துப்பரணி, அகநாநூறு, புறநாநூறு, இதிகாசம், கல்வெட்டுகள், செப்பேடுகள், கலித்தொகை, நற்றிணை போன்றவற்றில் காண முடிகிறது.
பார்க்கவகுலம் பாரியின் பரம்பரையினர்தான் என கி.பி.1231ல் எழுதப்பட்ட தெய்வீக மன்னன் செப்பேடும், கி.பி.1210ல் எழுதப்பட்ட திருக்கோவிலூர் மேலமடம் தெய்வீக நரசிங்கராஜ உடையார் செப்பேடும் கூறுகின்றன. அதேபோல், தமிழகத்தில் ஆட்சி புரிந்த முற்கால சோழர்களில் மனுநீதிச் சோழன், முகுந்தன், சிபி சக்கரவர்த்தி, காந்தன், செம்பியன், கரிகாலன், கிள்ளவளவன், நனங்கிள்ளி, தித்தன், பெருங்கிள்ளி, நல்லுதிரன், கோப்பெருஞ்சோழன், கோச்செங்கன் ஆகியோர் சூரிய குலத்தில் தோன்றிய பார்க்கவ இன மன்னர்கள் என பல வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. 
சங்கத்தமிழ் நூல்களால் போற்றிப் புகழ்பாடுகின்ற கடையேழு வள்ளல்களில் ஒருவராகிய முல்லைக்கு தேர்தந்த பாரி மன்னனின் பெயரினைத் தமிழறிந்தோர் அனைவரும் அறிவர். பறம்பு மலைக்குத் தலைவன் முந்நூறு ஊர்களைத் தன்னகத்தே கொண்ட சிங்க நாட்டை ஆண்டவன் அதனால் பெய்யா நாவிற் கபிலர் "பறம் பிற் கோமான் பாரி" என்று புகழ்ந்துரைத்தார். 
இந்நாடு மேற்கு இராமநாதபுரத்தை உள்ளடக்கிய பகுதியாக இன்று விளங்கி வருகிறது. பாரியின் பெரு வீரத்தை விளக்கும் பொருட்டு சிங்கன் போன்று வலிமையுடன் பொருது பகைவரை வென்றமையால் அவன் ஆண்ட நாட்டினைச் சிங்க நாடென வழங்கிச் சிறப்பித்தனர். 
பண்டைய தமிழகம் ஈரமும், வீரமும், வன்மையும், ஈகையும் செறிந்த வளநாடு அதில் நடுநாடு என வழங்கப்பட்ட திருமுனைப்பாடி இன்றைய விழுப்புரம் மாவட்டம் தென் பெண்ணை ஆற்றின் தென்புறம் அமைந்துள்ளது திருக்கோவிலூர் என்னும் நகர். இந்நகரில்தான் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய "காரி" என்கின்ற திருமுடிக்காரி மலையமான் அரசு ஆண்டுவந்தார். 
கி.மு.300 ஆண்டு முதல் கி.பி.200 ஆண்டுவரை சங்ககாலம் (கடைச்சங்கம்) எனலாம். திருமுடிக்காரி அரசாண்ட காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டு என சங்க கால வரலாற்று நூல் அகம், புறம் எனும் நூலில் காணப்படுகின்றது. 
கடைச்சங்க காலத்தில் மூவேந்தர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் காலமும் ஆகும். திருமுடிக்காரியின் சமகாலத்து குறுநில மன்னர்கள் பாரி, ஓரி, அதியமான், பெருஞ்சேரல், இரும்பொறை, கிள்ளிவளவன், நெடுங்கிள்ளி, தொண்டைமான், இளந்திரையன், மாவளத்தான் ஆகியோர் ஆவர்.



கேட்டால்தான் கிடைக்கும் எனவே கேட்க வேண்டும், கேட்பதற்கோர் அமைப்பு வேண்டும். வகுப்புரிமை பிரதிநிதித்துவம் அனைத்து துறைகளிலும் நம்மவர் கிடைக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகளில் பார்க்கவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை பெற்றே தீர வேண்டும் என்ற சிந்தனை தீ நம்மினப் பெரியோர்களின் நெஞ்சில் சுடர் விட்டது. அதன் விளைவாக அரும்பியதுதான் "பார்க்கவகுல சங்கம்". 
1911ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் நாள் மணம்பூண்டி திரு.ம.ரா.குமாரசாமி அவர்களால் திருக்கோவிலூர் மணந்தது. திரு.ம.ரா.கு அவர்களோடு, திருச்சி மேல கற்கண்டார் கோட்டை மே.வே.துரைசாமி உடையார், வெள்ளையூர் சொக்கலிங்க உடையார், மாரண்ட அள்ளி எம்.ஆர்.வெங்கடாசல உடையார், வில்வராயநல்லூர் முத்துக்குமாரசாமி உடையார், திருவாரூர் சிவவடிவேல் உடையார் ஆகியோரின் முயற்சியால் ஸ்ரீஞானியார் சுவாமிகள் தலைமையில் பார்க்கவகுல சங்கத்தின் தொடக்க விழா நடைப்பெற்றது. 
அவ்விழாவிலேயே பார்க்கவகுல சங்கத்தின் முதல் தலைவராக மணம்பூண்டி திரு.ம.ரா.குமாரசாமி உடையார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட்டி தொட்டியெல்லாம் சென்று நம்மின ஒற்றுமைக்கும் முன்னேற்றதிற்கும் பாடுபட்டார். 
14.05.1943ம் ஆண்டு மேல் கற்கண்டார் கோட்டை மே.வே.துரைசாமி உடையார் அவர்கள் தலைவராகவும், 19.10.1969ம் ஆண்டு சேலம் திரு.ந.அருணாசல உடையார் அவர்களும், 23.05.1988-ல் ஸ்ரீராமச்சந்திரா பல்கலைகழக நிறுவனர் திரு.என்.பி.வி.ராமசாமி உடையார் அவர்களும், 1999ல் கபிஸ்தலம் திரு.ஆர்.சௌந்தரராஜ மூப்பனார் அவர்களும் தலைவராக செயல்பட்டனர்.

தனி மனித உழைப்பின் சிகரம், ஓய்வரியா உழைப்பாளி, பொறியியல் கட்டிடக்கலையில் கூர்மையான ஞானமுள்ளவர், ஆங்கில மொழியாற்றல் பெற்றவர், சரளமாக சொற்பொழிவாற்றும் திறமை பெற்றவர், தமிழில் கவிதை எழுதும் ஆர்வமிக்கவர், சீரிய பகுத்தறிவுச் சிந்தனையாளர், அவர் தேர்ந்தெடுத்த அத்தனை துறைகளிலும் வெற்றி பெற்றவர், பார்க்கவர்களின் முகவரி, பார்க்கவர்களின் காவலர், கல்வி வள்ளல் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள். 
1968 முதலே சங்கத்தோடு தொடர்புடைய டாக்டர் பாரிவேந்தர் அவர்கள், 1978ம் ஆண்டு மாநில பொதுச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றிய அனுபவத்துடன், 1984ல் சேலம் மாநகரில் நடைபெற்ற பிரமாண்டமான மாநில சங்க மாநாட்டில் கல்வி பற்றி அனைவரும் பாராட்டும் வகையில் சொற்பொழிவாற்றிய பெருமைக்கும் உரியவர். 
15.02.2009ம் ஆண்டு பார்க்கவகுல சங்கத்தின் உயர்மட்டக்குழு தலைவராக டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
03.03.2009ம் ஆண்டு சங்கத்தின் உயர்மட்டக்குழு தலைவர் என்ற முறையில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் திருச்சியில் பொதுகுழுவை கூட்டி அக்கூட்டத்தில் தலைவராக திரு.கோவைத்தம்பி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
31.10.2010ல் திருச்சியில் பார்க்கவகுல சங்கம், பார்க்கவகுல முன்னேற்ற சங்கமாய் டாக்டர் பாரிவேந்தர் அவர்களை நிறுவனராக பரிணாம வளர்ச்சி பெற்று அதன் தலைவராக திரு.ம.சுந்தரராசு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
28.04.2012ல் பார்க்கவகுல சங்கம் தோன்றிதன் 100ம் ஆண்டு விழாவினையும், பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் 2ம் ஆண்டு விழாவினையும் ஒன்றாக இணைத்து விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமையில் மிகப்பெரிய மாநாடாக கொண்டாடப்பட்டது. அதில் பல லட்சம் பார்க்கவ சொந்தங்கள் கலந்து கொண்டனர். அதில் மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. 
16.02.2013ல் சேலம் முத்தம்பட்டியில் நடைபெற்ற பார்க்கவகுல முன்னேற்ற சங்க பொதுக்குழுவில் மாநிலத் தலைவராக திரு.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களும், பொதுச் செயலாளராக திரு.ஆர்.சத்தியநாதன் அவர்களும், பொருளாளராக திரு.எஸ்.எஸ்.வெங்கடேசன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு சமூகப் பணியில் தொடர்கின்றனர்.


4 comments:

Unknown said... 29 August 2021 at 17:28

மூப்பனார் டா

Anonymous said... 29 October 2022 at 04:27

பார்கவகுலம் புகழ் வாழ்க

Anonymous said... 29 October 2022 at 04:30

டாக்டர் பாரிவேந்தர் புகழ் வாழ்க 🇦🇹
என் பெயர். சத்தியராஜ் சூரிய குலத்தில் பிறந்தவன்

Anonymous said... 2 December 2022 at 14:23

பார்க்கவன் சூரியகுலத்தோன்

 
Top