Sub Divisions are

Nathaman ,Malaiyaman-Udayar ,

Suruthiman-Moopanar and Nainar are Called Parkavakulam.

All Are Mostly Land Lords In their Villages with Agricultural Base.

In Tamilnadu Spread Over In All Districts.

Majority Lives In Tanjore,Perambalur,Salem,Ramnad,Pudukottai,Madurai & Trichy.

அடுத்து என்ன நடக்கும் தெரியுமா -நோயாளிக்கு எப்படி அணுகுமுறை குடும்பத்திற்கு எப்படி அணுகுமுறை

கொரோனா பாஸிட்டிவ் அப்படின்னு சொல்லி ரிசல்ட் வந்ததுனா  அடுத்து என்ன நடக்கும் என்று  பார்க்க போகிறோம்  
அதாவது நம்ம உடம்புல கொரோனா இருப்பது சோதனையில் உறுதியானால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா முதல்ல அதுக்கு முன்னாடி நீங்க ஒரு டெஸ்ட்டிற்கு போகும் போது அதாவது கொரோனா  உடல் பரிசோதனைக்கு போகும் போது உங்களுடைய ரத்த டெஸ்ட்  எடுக்க மாட்டாங்க டிவியில  எல்லாம் பாத்து இருப்பிங்க ஒரு குச்சி முனைல பஞ்சி இருக்கும் அந்த பஞ்சியில் உங்களுடைய சளித்துளியை எடுப்பார்கள் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் இருந்து மாதிரிகள் எடுக்கப்படும் . மேலும் சில விவரங்கள் கொடுக்க வேண்டி இருக்கும். உங்களுடைய பெயர் வயது முகவரி செல்போன் எண் தேவைப்பட்டால் ஆதார் எண் ஆதார் எண் இல்லனா பரவால்ல .

 மொபைல் போன் நம்பர் கொடுத்தீங்க அதுல ஒரு எஸ்எம்எஸ் வரும் அந்த எஸ் எம் எஸ் ல  வரும் அந்த லின்கை நீங்கள் கிளிக் செய்தால் நீங்க எங்க  கொரோனா டெஸ்ட் எடுத்திங்க  உங்களுடைய சாம்பிள் / மாதிரிகள் எந்த ஆய்வகத்துக்கு போய் இருக்கு என்ற தகவல் வரும் ஆனா முடிவு அதில்  வராது . முடிவு தெரியும்வரை  நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
  எத்தனை நாளைக்கு கேட்டீங்கன்னா அதிகபட்சம் இரண்டு நாள்களுக்கு. இரண்டு நாளுக்குள்ளாற ரிப்போர்ட்டை  உங்களுக்கு போன் போட்டு சொல்லுவாங்க உங்களுக்கு கொரோனா  இருப்பது யார் சொல்லுவாங்கனு நீங்க கேட்டீங்கன்னா நீங்கள் சென்னையில் வசிபவரா  இருந்தால் மாநகராட்சி உங்களுக்கு போன் போட்டு சொல்வாங்க ஒரு அதிகாரி உங்களுக்கு போன் போட்டு சொல்லுவார் உங்கள் உடலில் கொரோனா உள்ளது டெஸ்ட் பாசிட்டிவாக வந்திருக்கிறது சொல்லி போன் போட்டு சொல்லுவார் ஒருவேளை நீங்கள் கிராமப் பகுதிகளில் வசிப்பவராக  இருந்தால் உள்ளாட்சி அமைப்பு  அரசு சார்பாக உங்களுக்கு உங்கள் உடலில் கொரோனா  இருக்கு அப்டின்னு சொல்லி உங்களுக்கு போன் போட்டு சொல்ற அதே நேரத்தில் உங்களுடைய வீட்டுக்கும் வந்து விடுவார்கள் அரசு பணியாளர்கள் . கிருமிநாசினி வீட்டுக்கு உள்ளேயும் வீட்டுக்கு வெளியேயும் தெளிக்கப்படும் அதுமட்டுமில்ல வீட்டை சுத்தி அதாவது வீட்டுக்கு வெளியில் யாரும் வாகனத்தில் பயணிக்க முடியாத படி  தகடு அடிக்கப்படும் அதுல ஒரு நபர் போய் வரும் படி இருக்கும் வாகனத்தில் போகமுடியாது.அந்த வீட்டுல உள்ளவங்க குறைந்தது கொஞ்ச நாளைக்கு எங்கேயும்  வெளியே போக கூடாது என்ற அளவில் அது செய்யப்படுகிறது வெளியாளும்  உள்ளே வரக்கூடாது . மளிகை பொருட்கள் காய்கறிகள் எல்லாம் எப்படி வாங்குவது  என்று  நீங்கள் கேட்டீர்கள் ஆனால் அதற்குத்தான் அரசாங்கமும் சமூக ஆர்வலர்களை அந்த இடத்தில் நியமித்து இருக்கிறார்கள். 

அவர்களுக்கு  அரசாங்கம் பணம் ஊதியமாக கொடுத்து கொரோனா வந்த வீட்டிலுள்ள அவர்களுக்கு என்ன தேவையோ அவர்களிடம்  பணத்தை  பெற்று  அவர்களே வாங்கி கொண்டு வந்து வீட்டு வாசலில் வைத்து விடுவார்கள். 
நோயாளிக்கு எப்படி அணுகுமுறை குடும்பத்திற்கு எப்படி அணுகுமுறை 
நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு போக ஆம்புலன்ஸ் வந்தவுடன் கொரோனா மருத்துவமனைக்கு கொண்டுசெல்வாங்க   கொரோனா மருத்துவமனைக்கு வந்த  பிறகு வேறு சில டெஸ்ட் எல்லாம் உங்களுக்கு எடுக்கப்படும் பிபி சுகர் டெஸ்ட் இப்படியாக உங்களுடைய நுரையீரல் எப்படி இருக்கிறது உங்கள் உடம்பில் இதுவரை என்ன செய்துள்ளது எம்மாதிரியான வீரியத்தில் கொரோனா உடலில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற அடிப்படையில் அந்த தகவலை வைத்துக்கொண்டு நீங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமா அல்லது  அரசாங்கம் எடுத்துள்ள தனியார் காலேஜ்ல உள்ள கேர் சென்டருக்கு  அனுபலாமா என்று  முடிவுஎடுப்பார்கள் .தனியார் கல்லூரியில்  உள்ள ஹாஸ்டல்ல உள்ள ரூம் எல்லாம் அரசாங்கம் எடுத்து வச்சி இருக்காங்க தனியறையில் நீங்கள் தங்கலாம் பெரும்பாலும் கழிப்பறைகள் பொதுவாக தான் இருக்கும் .உங்க கிட்ட கேட்டு அது முடிவு பண்ணுவாங்க .
உடம்பு உங்களுக்கு ரொம்ப சரி இல்ல அப்படின்னா நீங்க மருத்துவமனையில் அட்மிட் ஆகணும் சுமாரா இருக்கு பிரச்சினையில்லை   லேசான அறிகுறிகள் அப்படின்னா காலேஜ் கேர் சென்டர்ல  நீங்க அனுமதிக்கப்படுவீர்கள் . அங்கே உங்களுக்கு என்ன தரப்படும் என்று கேட்டிங்கன்னா காலை 6 மணியிலிருந்து அதாவது கபசுரக் குடிநீர் இல் ஆரம்பித்து பழம்,முட்டை , ஆரோக்கியமான உணவு வகைகள் இதெல்லாம் தொடர்ந்து கொடுத்திருப்பாங்க 6 மணிக்கு ஆரம்பித்து காலை 8 மணிக்கு காலை உணவு மீண்டும் 11 மணிக்கு ஸ்நாக்ஸ் கொடுப்பாங்க மீண்டும் ஒரு மணிக்கு உங்களுக்கு மதிய உணவு 3 மணிக்கு சுண்டல் காபி  கொடுத்து இரவு டிபன் எல்லாம் சரியாக கொடுத்துடுவாங்க மறுபடியும் கபசுரக் குடிநீர். காலை முதல் இரவு வரை கரெக்டா உங்களை தேடி வந்துரும்  எந்த பிரச்சனையும் இல்லை இதற்காக நீங்கள் எந்த பணமும்  செலவிட வேண்டிய அவசியமும் கிடையாது எல்லாமே அரசு பார்த்துக் கொள்ளும்.
 கொஞ்ச நாள் ஆன பிறகு சுமார் ஒரு வாரம் பத்து நாள் ஆன பிறகு டெஸ்ட் எடுத்து உங்களுக்கு அறிகுறி  எல்லாம் இல்ல அப்படின்னா உங்கள  வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள் இது நோயாளி சம்பந்தப்பட்ட விஷயம்.
குடும்பத்திற்கு எப்படி அணுகுமுறை
 இதே நேரத்தில் நோயாளிகளின்  குடும்பத்தாருக்கு என்ன நடக்கும் ஆம்புலன்ஸில் நோயாளியை ஆஸ்பத்ரி கூட்டிட்டு போனபிறகு  நோயாளியின்  குடும்பத்தார் யாருக்காவது அறிகுறி  இருக்கா அப்படின்னு சொல்லி டெஸ்ட்  பண்ணுவாங்க அறிகுறி இருந்தால் அவர்களுக்கும் கொரோனா  பரிசோதனை நடத்தப்படும் அவர்கள் உடலில் கொரோனா  இல்லனா  அவங்க கிட்ட என்ன சொல்லுவாங்க அதிகாரிகள் அப்படின்னா நீங்க உங்க குடும்பத்துல ஒருதருக்கு கொரோனா  வந்திருக்கிறதால  கொஞ்ச நாளைக்கு எங்கேயும் வெளியே போக வேண்டாம்  அப்படின்னு சொல்லி  வீட்டு முன்னாடி நோட்டீஸ் ஒட்டி  தடுப்பை அடித்துவிடுவார்கள் நீங்களும்   குடும்பத்தினரும் கொஞ்சநாள் வீட்டிலேயே இருக்க வேண்டிவரும்.தினமும் கிருமிநாசினி வீட்டுக்கு உள்ளேயும் வீட்டுக்கு வெளியேயும் மற்றும் தெருவில் அக்கம்  பக்கம்  வீடுகளிலும் தெளிக்கப்படும் .

0 comments:

 
Top