Sub Divisions are

Nathaman ,Malaiyaman-Udayar ,

Suruthiman-Moopanar and Nainar are Called Parkavakulam.

All Are Mostly Land Lords In their Villages with Agricultural Base.

In Tamilnadu Spread Over In All Districts.

Majority Lives In Tanjore,Perambalur,Salem,Ramnad,Pudukottai,Madurai & Trichy.

திருச்சி:""தமிழக சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்,'' என, இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.,) நிறுவனத் தலைவர் பச்சமுத்து தெரிவித்தார்.


திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சி தனித்தே போட்டியிடும். எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிறுவப்பட வேண்டும்.அரசியல்வாதிகள் தேர்தல் களங்களில் இலவச வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சி பிடித்து மக்களை நிரந்தர அடிமைகளாக ஆக்குகின்றனர். அரசு வழங்கும் இலவசம் எல்லாம், மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்படுகிறது. இலவசத்துக்காக அரசு செலவழிக்கும் வரிப்பணத்தை முறையாக செலவிட்டால் மின்தடை பிரச்னை, விலைவாசி உயர்வு பிரச்னை ஆகியவை வராது.



விவசாயத்துக்கு நாட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தற்போது தமிழகத்தில் 471 இன்ஜினியரிங் கல்லூரி உள்ளன. அதற்கு இணையாக விவசாய கல்லூரி துவங்கப்பட வேண்டும்.இந்திய ஜனநாயக கட்சியில் மாவட்டம், வட்டம், ஒன்றியம், கிளைக்கழகம் ஆகியவற்றில் உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குள் இந்திய ஜனநாயக கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்கள் இருப்பர்.சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு எங்களின் பலத்தை நிரூபிப்போம். கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளிலாவது வெற்றி பெறுவோம்.இவ்வாறு பாரி வேந்தர் கூறினார்.
நன்றி -தினமலர்

0 comments:

 
Top