Pages

Tuesday, 14 April 2020

பார்க்கவ குல சொந்தங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் -கொரோனா வைரஸ் நோயை தடுக்க

பார்க்கவ  குல சொந்தங்களுக்கு  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
கொரோன வைரஸ் கொவிட் 19 பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு  நடைமுறையில் இருக்கும் நிலையில் இந்த புது வருட பிறப்பு  அனைவருக்கும்  ஒருவித பயத்தை உருவாக்கியுள்ளது ,
 வருட ஆரம்பமே முதல் கட்ட ஊரடங்கு அறிவிப்பு 21 நாள் முடிந்து வரும் மே 3 வரை 2ம்  கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே அனைவரும் வரும் மே 3 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
மனிதா்களுக்கு எதிரான கரோனா வைரஸ் நோயை தடுக்க சாதி, மத பேதமின்றி, நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொண்டு போராடுவோம் 
-------

சார்வரி வருஷ வெண்பா:
சார்வரி யாண்டதனிற் சாதிபதி னெட்டுமே
தீரம றுநோயற் றிரிவார்கள் - மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரு மற்றவரும்
ஏம மின்றிச் சாவா ரியல்பு.
- இடைக்காடர் வாக்கு

No comments:

Post a Comment