Pages

Sunday, 27 October 2019

Heavy rain likely to lash Maharashtra, Goa as KYARR further intensifies into extremely severe cyclonic storm


Oct 27, 2019

Heavy rain likely to lash Maharashtra, Goa as KYARR further intensifies into extremely severe cyclonic storm

@IMDWeatherCyclone Kyarr has intensified as it moves away from the Indian coast moving towards Oman. Coast Guard Commander S S Dasila has said that their ships and Dornier aircraft is keeping watch at sea to carry out any search and rescue operation.

He said their ships are being relayed information on the positions of fishing boats on the Indian waters.

Light to moderate rainfall is expected at a few places and very likely over coastal districts of Maharashtra during next 12 hours. Light to moderate rainfall may occur at a few places in south Gujrat during the next 24 hours.

Sea condition likely to be very rough along and off Maharashtra, Goa and Karnataka coasts in the next 12 hours and along and off south Gujrat coast during next 24 hours.

Thursday, 24 October 2019

உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் SRM பல்கலைக்கழக தமிழ்ப்பேராயத்தின் மூலம் "உலகத் தமிழர் உறவு மையம்"

பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினரும் SRM பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் மூன்று நாள் பயணமாக தைவான் சென்றிருந்தார். 18.10.19 அன்று SRM பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களை சந்தித்து உரையாடிய பின்னர் குவாலியனில் உள்ள சுச்சி பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தோங்வா பல்கலைக்கழகங்களை பார்வையிட்டார். மேலும் இன்று  VGP குழுமத்தால் தைவான் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட  திருவள்ளுவர் சிலையை  தைவானில் உள்ள குவாளியனி தேசிய பூங்காவில் தைவான் கவிஞர் யூசி , VGP குழுமத் தலைவர் டாக்டர் VG சந்தோசம் ,  இந்திய தைவான் தூதர் டாக்டர் ஸ்ரீதரன் மதுசூதனன் , முன்னாள் நீதியரசர் வள்ளிநாயகம் மற்றும் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் டாக்டர் விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திறந்து வைத்தார். அத்துடன் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் SRM பல்கலைக்கழக தமிழ்ப்பேராயத்தின் மூலம் "உலகத் தமிழர் உறவு மையம்" தொடங்கப்பட்டுள்ளதை விளக்கினார்.#paarivendhar








Sunday, 20 October 2019

SRM IST Tamil Perayam Academy Awards 2018

காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில் தமிழ்ப்பேராய விருது 2018 வழங்கும் நிகழ்ச்சி 25.09.2019 நடைபெற்றது. இதில் சென்னை கிருஷ்ணாலயா நாட்டிய குழுவினரின் பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்களுக்கு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்கள் நிறுவன வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் விருது வழங்கினார்.இதில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
எஸ்.ஆர்.எம்.தமிழ்ப்பேராய விருது பெற்ற படைப்பாளிகள்...
பத்து விருதாளர்கள்...










பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி ஐயா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட போது.





SRM IST Tamil Perayam Academy Awards 2018
SRM IST TAMIL PERAYAM ACADEMY AWARDS 2018
Established in 2012 the Thamizh Perayam (Tamil Academy) of SRM Institute of Science and Technology has been considered as the Fifth Thamizh Sangam in literary circles. The Academy has been undertaking various efforts to encourage and develop prominent endeavors by eminent Tamil scholars for Tamil language and literature.
Since 2012, Thamizh Perayam has given away more than Rs 2 crores in awards as a way of honoring Creative writers and scholars across the world who have contributed to the development of Tamil Language, Literature and Culture with Cash awards. Continuing this 6-year tradition, the Chancellor of SRMIST Dr Paari Vendhar announced the winners’ list of the Thamizh PerayamVirudhugal-2018 mentioning that around Rs 15 lakhs of cash was sanctioned for the awards and the winners selected for 10 categories.
The honours fall under different categories like Tamil Creative Writers, Translators, Critics, Foreign Tamil Writers, Life time achievement award for Illustrious Tamil Scholars who have significantly contributed to the Tamil Language, Literature and culture.
A matter of significance is that winners of Thamizh Peraya Virudhugal have later been honoured with Sahithya Academy Award and through the selections based on the Central Institute of Classical Tamil the winners were even honoured with the prestigious President Award. These stand testimony for the quality and transparency rules of evaluations followed for the Tamil Peraya Virudhugal.
The announcement of the Thamizh Peraya Virudhigal Awards– 2018 was declared in the presence of the Pro Vice Chancellor of SRMIST and President of Thamizh Perayam Dr. R. Balasubramanian, Mr. M. Balasubramanian, Director of Finance and the Registrar of SRMIST Dr. N. Sethuraman.
Judge Committee
Honorable Justice Dr. P. Devadass
Dr. M. Rajendran
Dr. P.R. Subramanian
Kalaimamani Aandal Priyadharshini
Dr. R. Srinivasan
Tamil Academy Awardees List 2018
1. Pudhumaippithan Padaippilakkiya Virudhu(Rs. 1,50,000)
Name of the Book - Neeva Nathi
Name of the Author - Kavippithan
2. Bharathiyar Kavithai virudhu(Rs. 1,50,000)
Name of the Book - Inaiveli
Name of the Author – Marabin Maindhan Muthaiah
3. Azha. Valliappa Kuzhanthai ilakkiya virudhu(Rs. 1,50,000)
Name of the Book - Manthira Maramum Maya Ulagangalum
Name of the Author - Karpagam
4. Pe.Na. Appusamy Ariviyal Thamizh Virudhu / A.P.J. Abdul kalam Thozhilnutpa Virudhu(Rs. 1,50,000)
Name of the Book; - Inaiya Kuttrangalum Inayaveli Sattangalum
Name of the Author; - Chandirga Subramaiyan
5. Anandha kumarasamy Kavinkalai Virudhu / Muthutthandavar Thamizhisai Virudhu(Rs. 1,50,000)
Name of the Book - Kambanil Isai Thamizh
Name of the Author; - Arimalam S. Padmanaban
6. Parithimar Kalaingnar Thamizh Aivaringnar Virudhu (Rs. 1,50,000)
Name of the Book - Vilimbu Nilai Makkal Vazhakkarugal
Name of the Author – A. Dhananjeyan
7. Sudesamithiran Thamizh Idhazh Virudhu(Rs. 1,00,000)
Name of the Journal - Kaakai Siraginile
Name of the Author - V. Muthaiah
8. Tholkappiyar Thamizh sanga Virudhu(Rs. 1,00,000)
Name of the Society - Tamil Kalvi Sevai – Switcherland
Name of the president - Kandhasamy Parthiban
9. Arunachalakkavirayar Virudhu (Thamizh Music Troup / Folkarts Team) (Rs. 1,00,000)
Name of the Troup – Kalari Tholkalaigal Kalaingargal Mempattu Maiyam
Name of the president - Hari Krishnan
10. Paarivendhar Painthamizh Virudhu(Rs. 3,00,000)
Name of the Thamizh Scholar – Prof Dr. E. Sundara Moorthy
In the first six categories of the awards the writer of the book will receive Rs.1,25,000/- and the publisher of the book will be receiving Rs. 25,000/-

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுவிழா 2018 இனிதே நிறைவுற்றது. நான்காயிரம் மாணவர்கள் மத்தியில் பத்து விருதாளர்கள் ஆறு பதிப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். எங்கள் வேந்தர் ஐயாவின் தலைமையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் சிறப்புரையில் விழா உச்சம் தொட்டது.

Thursday, 17 October 2019

நத்தமன் குடிகாணி (குல தெய்வம்) -Kula Deivam

நத்தமன் குடிகாணி (குல தெய்வம்)🙏🏼

•வரலாற்றை புரட்டி பார் உனது முன்னோர்கள் வழங்கிய முதல் தெய்வம்👑

 இந்த பதிவு பார்க்கவ குல நத்தமன்  (உடையார்) மட்டுமே..

பூமி பாலகன்-மால்வாய்,

அய்யனாரப்பன்- திருக்கோவிலூர்,

பச்சையம்மன்- திருவண்ணாமலை,

 பச்சையம்மன்- ஆனந்தவாடி,

 பச்சையம்மன்-கீழப்புலியூர்,

பொன்முடி ராயர்- திருவண்ணாமலை,

 நாங்கூர்அம்மன்- புதுவேட்டக்குடி,

எசனை கருப்பு- அரியலூர்,

பச்சையம்மன்- பழங்காநத்தம்,

 அய்யனாரப்பன்- வேங்கைவாடி,

 பச்சையம்மன்- நல்லறிக்கை,

 சுந்தரமூர்த்தி- கொளத்தூர்,

 வெள்ளச்சியம்மன்- வெண்மணி,

 அங்காளபரமேஸ்வரி- துறையூர்,

 சாமுண்டீஸ்வரி-பொண்பரப்பி,

சின்னையன் பச்சையம்மன்- இலந்தைகூடம்,

பச்சையம்மன்- செம்பியக்குடி,

 பாப்பாரக்கண்ணி மோடையான்- மருவத்தூர்,

கருப்புசாமி- தொண்டபாடி,

பாப்பாத்தி கருப்பையா- கூத்தூர்,

வைகரையான்- புள்ளம்பாடி,

நாச்சியார் அம்மன்- நல்லறிக்கை,

வீர முத்தையா பாப்பாத்தியம்மன்- அரியலூர்,

பச்சையம்மன்- திம்மூர்,

ஆணையடி கருப்பு அய்யனார்- கல்லக்குடி,

 ஊராளியம்மன்- ஆசனூர்,

 மானிக்காயி கருப்பையா- வெண்மணி,

 குன்னுடையான்- வீரப்பூர்,

 ஒப்பிலாத்தம்மன்- அரியலூர்,

 சங்கிலிகருப்பு வடுகச்சியம்மன்- ஆலங்குடி,

அம்மச்சம்மன்- திருக்கோவிலூர்,

 ஏரிக்கரை முத்தையன்- பெரம்பலூர்,

 அய்யனார்- கண்ணனூர்,

 வடுகமுத்தாயிம்மன்- சங்கேந்தி,

 வைத்தீஸ்வரன் தையல் நாயகி- நாகை,

 காத்தாயிம்மன்- கீழையூர்,

 ஒண்டிகருப்பண்ணசாமி- புள்ளம்பாடி,

 மாரியம்மன்- பழங்கலூர்,

அய்யனார்- வாயில் பாடி,

 செல்லப்பிள்ளை அய்யனார்- கீழப்பழூர்,

 பாவாடராயன்- கடலூர்,

நிரால்மணி மகாமாரியம்மன்- வேப்பூர்,

 பச்சையம்மன்- செட்டிகுளம்,

சப்பாணி கருப்பு- சங்கேந்தி,

 பிடாரியம்மன்- குடியநல்லூர்,

 ஸ்ரீபெரியசாமி- இலப்பையூர்,

 உசிலடிகருப்பு- அணைப்பாடி,

 மருதையான்- அரியலூர்,

பிலிமுகத்து கருப்புசாமி- சித்தளி,

 அய்யனார்- வடகராம்பூண்டி,

 மால்வாய் முத்துசாமி - லால்குடி,

 மாரியம்மன்- புதுவேட்டக்குடி,

 மொடக்கருப்பு- அரியலூர்,

 அய்யனாரப்பன்  அன்னக்கிளி- சிறுகாம்பூர்,

செல்லப்பிள்ளையாண்டவர்- ஆங்கியனூர்,

ஸ்ரீநல்லத்தாயம்மன்- தேவியாக்குறிச்சி,

ஸ்ரீ பொன்னையா- அல்லிநகரம்,

ஸ்ரீ முத்தையா-திட்டக்குடி,

 சின்னகருப்புசாமி- சில்லக்குடி,

 படைக்காத்த அய்யனார்- பெரம்பலூர்,

  வயலபாடி அய்யனார்- திட்டக்குடி,

 அய்யனார்- வீரங்கிபுரம்,

 வெள்ளந்தாங்கியம்மன்- பெரம்பலூர்,

 சாயமரத்தான் பெரியசாமி- நாமக்கல்,

 கூமத்துறையான்- சிறுவாச்சூர்,

கல்லத்து கருப்பு அய்யனார்- குமுழூர்,

 வேம்படியான்- சிறுவன்பூர்,

செல்லியம்மன்- வேப்பந்தட்டை,

 பச்சையம்மன்- டால்மியா,

 முத்துமணியாண்டவர்- புள்ளம்பாடி,

 யானையடியான்- முருவத்தூர்,

 பாக்கப்பாடி அய்யனார்- சின்னசேலம்,

 பெரியாண்டவர் நல்லத்தாயி- சித்தளி,

 மாத்தூர் மருதையான் - பெரம்பலூர்,

 மானிக்காயி- வேப்பந்தட்டை,

 பச்சையம்மாள்- மால்வாய்,

ரெங்கநாதர்- ஸ்ரீரங்கம்,

 நல்லத்தாயம்மன்- குன்னம்,

 பெரியாயியம்மன்- திருவண்ணாமலை,

ஸ்ரீபொன்னையா- அரியலூர்,

 கன்னிமார்- இசுக்குழி திருவண்ணாமலை,

 பெருமாநாச்சியம்மன்- கண்டாச்சிபுரம்,

 சாத்தியப்பா- அரியலூர்,

அய்யனார்- புதூர் பாளையம்,

ஆலடி பெரியசாமி- டால்மியா,

 அங்காளம்மன்- மேல்மலையனூர்,

 வடுகச்சியம்மன்- நத்தமாடிப்பட்டி,

மதுரை வீரன்- மதுரை,

 பச்சாயிபுவாயிகாத்தாயி- குமுழூர்,

 அய்யனார்- மூலசமுத்திரம்,

 காமாட்சியம்மன்- டால்மியா,

 வீரங்கிஅய்யனார்- கள்ளக்குறிச்சி,

 சங்கிலிகருப்பு வடுகச்சியம்மன்- வாலிகண்டாபுரம்,

உசிலடியான் கருப்புசாமி- புள்ளம்பாடி,

 படைகாத்தவர்- குன்னம்,

 பாப்பாத்தியம்மன்- மால்வாய்,

 குட்டாண்டவர்- கெங்கவல்லி,

 பூவாயிம்மன்- தொண்டப்பாடி,

ஏழை அய்யனார்- உளுந்தூர்பேட்டை,

 கொரப்பிள்ளையான்- வாலிகண்டாபுரம்,

 பெரியாயி அங்காளபரமேஸ்வரி- சித்தலூர்,

கருப்பையா- கீழகோவண்டாகுறிச்சி,

 தம்புராம்பாள்- கொத்தக்கோட்டை,

 வீரமுத்தையா- பொய்யாதநல்லூர்,

 கருப்பண்ணன்- வேட்டக்குடி,

 அங்காளம்மன்- குறிஞ்சிபாடி,

வாலிஸ்வரர்- வாலிகண்டாபுரம்,

 ஸ்ரீ முத்தையன் தையல் நாயகி- சடரமங்கலம்,

காசிமுனி கருப்பையா- பேரளி,

சாமாயி கல்லமாரி- சிக்கத்தம்பூர்,

படைக்காத்தவர்- காடூர்,

மானிக்காயி செல்லியம்மன் - தொண்டப்பாடி,

வெங்கடாஜலபதி- கழுதூர்,

 செல்லியம்மன்- காரைப்பாடி,

 ஸ்ரீமருதையான்- மேல்மாத்தூர்,

 அய்யனார்- காருகுடி,

ஊராளி அய்யனார்- கூந்தலூர்,

 அய்யனார்- பொய்யூர்,

பட்டாணி கருப்பர் செல்லியம்மன்- கண்ணனூர்,

செல்லாயி- தொண்டைமான் நல்லூர்,

 செங்காமுனியப்பர்- மருவத்தூர்,

 பச்சையம்மன்- கெனலவாடி,

சடையப்பர்- நாரையூர்,

பச்சையம்மன்- சில்லக்குடி,

 செல்லியம்மன்- சன்னாவூர்,

எல்லையம்மன்- கீழகாவட்டாங்குறிச்சி,

 நொண்டி கருப்பு சாமி- புலியூர்,

 வினைதீர்த்த அய்யனார்- ஆலம்பாடி,

 காமாட்சியம்மன் அய்யனார்- அரியலூர்,

 பச்சையம்மன்- ஆதிகுடிகாடு,

 மருதையான்  அய்யனார்- துனிஞ்சபாடி,

 அய்யனார் செல்லியம்மன் முனியப்பர்- குருபீடபுரம்,

அம்பாள் ஆட்சியம்மன்- இராயம்பரம்,

ஸ்ரீகல்லேரி முனியப்பன்- பேரளி,

கல்லமேட்டு கருப்புசாமி- கல்லக்குடி,

 உஞ்சினி பெருவிழியப்பா- செந்துறை,

 பாப்பாத்தியம்மன்- நிரால்மணி,

 மலையாளத்து கருப்பர்- கொளத்தூர்,

 அய்யனார்- மணப்பத்தூர்,

செட்டி கருப்பு- புள்ளம்பாடி,

வீர முத்தையா- வெள்ளூர்,

நல்லத்தாயம்மாள்- இலந்தைகூடம்,

 அலப்பெரட்டியம்மன்- புள்ளம்பாடி,

 ஸ்ரீபாப்பாத்தியம்மன்- புள்ளம்பாடி,

 பச்சையம்மன்- கொலக்காநத்தம்,

ஸ்ரீமுத்துமுனியாண்டவர்- வாணதிராயன்பாளையம்,

சந்திவீரப்பர்- சங்கேந்தி,

மஞ்சப்பர்- வேப்பூர்,

மருதையான்- மங்களமேடு,

 அய்யனார்- சிறுகளப்பூர்,

மதுரை வீரன்- ஆங்கியனூர்,

 ஸ்ரீகாமாட்சியம்மன்- ஒட்டக்கோவில்,

 வேம்படியான்- சிறுவன்பூர்,

வடுக முத்தாயி அம்மன்-புஞ்சை சங்கேந்தி,

 முத்தையன் தையல் நாயகி-சரடமங்கலம்.

இதில் விடுபட்ட பெயர்களை பதிவிடவும்..


Varadharaja perumal temple
 Periya Venmani Sri Varadaraja perumal temple
Periya Venmani village , Kunnam Taluk , perambalur







வெற்றிவேற்கை-Tamil literature (தமிழ் இலக்கியம்)

அதிவீரராம பாண்டியர் என்பார் பாண்டிய நாட்டு கொற்கையை பகுதியை 450 ஆண்டுகளுக்கு முன் ஆண்டசிற்றரசனன் ஆவார். வரதுங்கபாண்டியர்கு இளவல். நைடதம், கூர்ம புராணம், இலிங்க புராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி முதலிய பிற நூற்களையும் இயற்றியுள்ளார்.

கடவுள் வாழ்த்து

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரணஅற் புதமலர் தலைக்கணிவோமே.

நூல்

1. எழுத்தறி வித்தவன் இறைவ னாகும்.

2. கல்விக் கழகு கசடற மொழிதல்.

3. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.

4. வேதியர்க் கழகு வேதமும் ஒழுக்கமும்.

5. மன்னவர்க் கழகு செங்கோல் முறைமை.

6. வணிகர்க் கழகு வளர்பொரு ளீட்டல்.

7. உழவர்க் கழகுஏர் உழுதூண் விரும்பல்.

8. மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல்.

9. தந்திரிக் கழகு தறுகண் ஆண்மை.

10. உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்.

11. பெண்டிர்க் கழகுஎதிர் பேசா திருத்தல்.

12. குலமகட் லழகுதன் கொழுநனைப் பேணுதல்.

13. விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல்.

14. அறிஞற் கழகு கற்றுணர்ந் தடங்கல்.

15. வற்ஞர்க் கழகு வறுமையில் செம்மை.
16.
தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர் கிருக்க நிழலா காதே.
தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.
அதனால்,
பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்
சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்
பெற்றோ ரெல்லாம் பிள்ளை களல்லர்
உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர்
கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர்.

17.
அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது.
சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது.
அரைக்கினும் சந்தணம் தன்மணம் அறாது.
புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.
அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய்.
ஊட்டினும் பல்விரை உள்ளி கமழாது.
ஒருநாள் பழகினும் பெரியோர்க் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே.
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நிர்க்குள் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.
பெருமையும் சிறுமையும் தான்தர வருமே.

18.
சிறியோர் செய்த சிறு பிழை யெல்லாம்
பெரியோ ராயின் பெறுப்பது கடனே.
சிறியோர் பெரும்பிழை செய்தன ராயின்
பெரியோரப் பிழை பொறுத்தலு மரிதே.
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.

19.
கல்லா ஒருவன் குணநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதரா கும்மே.
நாற்பால் குலத்தின் மேற்பா லொருவன்
கற்றில னாயின் கீழிருப் பவனே
எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்
அற்வுடை ஒருவனை அரசைனும் விரும்பும்
அச்சமுள் ளடக்கி அறிவகத் தில்லாக்
கொச்சை மக்களைப் பெருதலின் அக்குடி
எச்சமற் றேமான் திருக்கை நன்றே.

20.
யானைக்கு இல்லை தானமும் தருமமும்
பூனைக்கு இல்லை தவமும் தயையும்
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்

21.
சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும்
முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும்
அச்சமும் நாணமும் அறிவிலோர்க் கில்லை
நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை
கேளும் கிளையும் கெட்டோர்க் கில்லை.

22.
உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா
குடைநிழலிருந்து குஞ்சர மூர்ந்தோர்
நடைமலிந் தோருர் நண்ணினும் ந ண்ணுவர்
சிறப்புஞ் செல்வமும் பெருமைய முடையோர்
அறக்கூழ்சாலை அடையினும் அடைவர்.
அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசரோடி ருந்தர சாளினும் ஆளுவர்
குன்றத் தனைய இருநிதி படைத்தோர்
அன்றைப் பகலே அழியனும் அழிவர்
எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்குக்
கழுதை மேய்பாழா கினும் ஆகும்
பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து
நெற்பொலி நெடுநக ராயினும் ஆகும்
மணஅணி அணிந்த மகளி ராங்கே
பிணஅணி அணிந்துதம் கொழுநரைத் தழீஇ
உடுத்த ஆடை கோடியாக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்
இல்லோ ரிரப்பதும் இயல்பே இயல்பே
இரந்தோர் கீவதும் யடையோர் கடனே.

23.
நல்ல ஞானமும் வானமும் பெறினும்
எல்லாம இல்லை இல்லிலல் லோர்க்கே.

24.
தறுகண் யானை தான்பெரி தாயினும்
சிறுகண் முங்கிற் கோற்கஞ் சும்மே.

25.
குன்றுடை நெடுங்காடு ஊடே வாழினும்
புன்தலைப் புல்வாய் புலிக் கஞ்சும்மே
ஆரையும் பள்ளத் தூடே வாழினும்
தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே
கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டின்
கொடும் புலி வாழும் காடு நன்றே.

26.
சான் றில்லாத் தொல்பதி யிருத்தலின்
தேன்தேர் குறவர்த் தேயம் நன்றே.

27.
வித்தும் ஏரும் யுளவாய் இருப்ப
எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே.

28.
காலையும் மாலையும் நான்மறை யோதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே.

29.
குடியலைந்து இரந்துவெங் கோலொடு நின்ற
முடியுடை இறைவனாம் முர்க்கனும் பதரே.

30.
முதலுள பண்டம்கொண்டுவா ணிபம்செய்து
அதன்பயன் உண்ணா வணிகரும் பதரே.

31.
தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப்
பின்பவள் பாராப் பேதையும் பதரே.

32.
தன்மனை யாளைத் தனிமனை யிருத்தி
பிறமனைக் கேகும் பேதையும் பதரே.

33.
தன்னா யுதமும் தன்கைப் பொருளும்
பிறன்கைக் கொடுக்கும் பேதையும் பதரே.

34.
வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்
சாற்றுவது ஒன்றைக் போற்றிக் கேண்மின்.
பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
மெய்பொ லும்மே மெய்போ லும்மே
மெய்யுடை ஒருவன் சொல்லாட் டாமையால்
பொய்போ லும்மே பொய்போ லும்மே.
அதனால்
இருவர் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையா ராயின்
மனுமுறை நெறயின் வழக்கிழந் தவர்தாம்
மனமுற மறுகிநின் றழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாளாகும்மே
பழியா வருவது மொழியா தொழிவது
சுழியா வருபுனல் இழியா தொழிவது.

35. துணையோ டல்லது நெடுவழி போகேல்

36. புணையோ டல்லது நெடும்புன லேகேல்.

37.
எழிலார் முலைவரி விழியார் தந்திரம்
இயலா தனகொடு முயல்வதா காதே.

38. வழியே ஏகுக வழியே மீளுக.

39. இவைகாண் உலகிற்கு இயலாம் ஆறே.

40. வாழிய நலனே வாழிய நலனே.

Monday, 22 July 2019

பாரிவேந்தர் பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் அலுவலகம் தொடக்கம்

பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் பெரம்பலூரையும் , திருச்சி, அரியலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றார். இதன் மூலம் வேளாண் விளைபொருட்களை அருகிலுள்ள நகரங்களுக்கு கொண்டு சென்று விற்க விவசாயிகளுக்கு வழி கிடைக்கும் என குறிப்பிட்டார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பாரிவேந்தர் M.P சனிக்கிழமை கூறியது:  மத்திய அரசு மாநிலங்களின் மீது ஹிந்தி மொழி திணிப்பது என்பது மாநில கொள்கைகளுக்கு எதிரானது. புதிய கல்விக் கொள்கை தமிழக மக்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதே தமிழக மக்களின் கருத்து என்பதால் அதை மறுத்து பேச விரும்பவில்லை. மக்கள், புதிய கல்விக் கொள்கையை விரும்பவில்லை என்பதே உண்மை. தேசிய புலனாய்வு முகமை சோதனை குறித்து மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்
பெரம்பலூர் பகுதியில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். மக்களின் தண்ணீர் பற்றாக் குறையை போக்குவதற்கு சொந்த செலவில் தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், முசிறியில் ஆழ்துளை கிணறு அமைத்து மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. பெரம்பலூர் விவசாயிகள் நிறைந்த தொகுதி என்பதால் அவர்கள் விளைவித்த பொருள்களை விற்பனை செய்யும் வரை அதனை பாதுகாப்பாக வைக்க குளிர்பதன கிடங்குகள் அமைத்து தருவதற்கு மக்களவையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட்டில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு மக்களின் குறைகள் தொடர்ந்து கேட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.  முன்னதாக, பெரம்பலூர்  மக்களவைத் தொகுதிக்குள்பட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.



Sunday, 7 July 2019

பெரம்பலூர் தொகுதி 300 மாணவர்களுக்கு இலவச இலவச உயர்கல்வி டாக்டர் பாரிவேந்தர் எம்பி

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் பெரம்பலூர் தொகுதி 300 மாணவர்களுக்கு  இலவச உயர்கல்வி டாக்டர் பாரிவேந்தர் எம்பி ஏற்பாடு 

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த 300 மாணவ மாணவியர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கட்டணமின்றி  இலவச உயர்கல்வி பயிலுவதற்கான அனுமதி தொகுதி எம்பியும் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் வேந்தருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் வழங்கினார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விபயில வாய்ப்பில்லாத பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவ மாணவியர் 300 பேருக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கட்டணமின்றி உயர்கல்வி பயிலுவதற்கான அனுமதியை நிறுவனத்தின் வேந்தரும் பெரம்பலூர் எம்பியுமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் வழங்கினார். இலவச உயர்கல்வி வாய்ப்பு பெறும் மாணவ மாணவியர் பட்டியலை எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் நடந்த எளிய நிகழ்ச்சியில் துணைவேந்தர் முனைவர் சந்திப் சன்சேத்தியிடம் வழங்கினார்.

பின்னர் இது சம்மந்தமாக டாக்டர் பாரிவேந்தர் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது 

என்னை பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதினேன் அதுவும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைத்தபோது உருவானது இலவச உயர்கல்வி வழங்குவது என்ற திட்டமாகும்.பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உயர்கல்வி பயில வாய்ப்பிருந்தும் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரிக்கு செல்ல முடியாதவர்களுக்கு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் இலவசமாக அந்த வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி இந்த வாய்ப்பை பெற 1,500 பேர் விண்ணபித்தனர் அவர்களது விண்ணப்பங்களை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டபின் தகுதியுள்ள 300 மாணவ மாணவியர் இலவச உயர்கல்விக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளான குளித்தலையில் 47லால்குடியில் 47 மணச்சநல்லூரில் 29 முசிரியில்37
 பெரம்பலூரில் 95 துறையூரில் 45மாணவ மாணவியர 154மாணவியர் 146 மாணவர் என 300 பேருக்கு படிப்பு கட்டணம் விடுதி கட்டணம் உணவு கட்டணம் ஆகிய அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் பயிலுபவர்களில் 10சதவிதமான 7000 மாணவமாணவியர் இலவசகல்வி பயிலுகையில் பெரம்பலூர் தொகுதிக்கு மட்டும் இந்த வாய்ப்பு ஏன் என்று நீங்கள் கேட்கலாம்.நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு அதிகமாக வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இதனை நான் செயல்படுத்துகிறேன்.இந்த வாய்ப்பு ஆண்டு தோறும்  தொடர்ந்து அந்த தொகுதி மாணவ மாணவியருக்கு கிடைக்கும் .

எந்த திட்டம் செயல்படுத்தினாலும் கல்வி வழங்கும் திட்டம் நிலையானது நாட்டின் சமுதாயத்தின்  வளர்ச்சிக்கு வழிவகுக்க கூடியது .எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் இலவச உயர்கல்வி வாய்ப்பளிக்கப்பட்டுள்ள மாணவ மாணவியர் படிப்பு காலத்தை முடித்து செல்லும்போது தரமான மாணவர்களாக மட்டுமின்றி வேலை வாய்ப்பு வசதியுடன்  செல்லும் வகையில் அவர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் சந்தீப் சன்சேத்தி இணை துணைவேந்தர்கள் முனைவர் டி.பி.கணேசன், முனைவர் பாலசுப்ரமணியன், மாணவர் சேர்க்கை இயக்குநர் முனைவர் டி.வி.கோபால் தேர்வு கட்டுபாட்டாளர் எஸ்.பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்