Pages

Thursday, 24 October 2019

உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் SRM பல்கலைக்கழக தமிழ்ப்பேராயத்தின் மூலம் "உலகத் தமிழர் உறவு மையம்"

பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினரும் SRM பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் மூன்று நாள் பயணமாக தைவான் சென்றிருந்தார். 18.10.19 அன்று SRM பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களை சந்தித்து உரையாடிய பின்னர் குவாலியனில் உள்ள சுச்சி பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தோங்வா பல்கலைக்கழகங்களை பார்வையிட்டார். மேலும் இன்று  VGP குழுமத்தால் தைவான் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட  திருவள்ளுவர் சிலையை  தைவானில் உள்ள குவாளியனி தேசிய பூங்காவில் தைவான் கவிஞர் யூசி , VGP குழுமத் தலைவர் டாக்டர் VG சந்தோசம் ,  இந்திய தைவான் தூதர் டாக்டர் ஸ்ரீதரன் மதுசூதனன் , முன்னாள் நீதியரசர் வள்ளிநாயகம் மற்றும் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் டாக்டர் விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திறந்து வைத்தார். அத்துடன் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் SRM பல்கலைக்கழக தமிழ்ப்பேராயத்தின் மூலம் "உலகத் தமிழர் உறவு மையம்" தொடங்கப்பட்டுள்ளதை விளக்கினார்.#paarivendhar








No comments:

Post a Comment