Pages

Thursday, 28 August 2014

வேந்தர் டிவி. உதயம் ஆகஸ்ட் 24 முதல் முறைப்படியான ஒளிபரப்பை துவங்கியுள்ளது


தமிழில் புதிதாக வேந்தர் டிவி. உதயம்
தமிழில் புதிதாக வேந்தர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சோதனை ஒளிபரப்பை செய்து வந்த வேந்தர் தொலைக்காட்சி.ஆகஸ்ட் 24 முதல் முறைப்படியான ஒளிபரப்பை துவங்கியுள்ளது. எஸ்.ஆர்.எம். குழுமத்திலிருந்து வரும் மற்றுமொரு தொலைக்காட்சி இது.

இதுகுறித்து வேந்தர் தொலைக்காட்சி தலைவரும் எஸ்.ஆர்.எம். பல்கலைகழக வேந்தருமான பாரிவேந்தர் கூறியதாவது: வேந்தர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, ஆண் பெண் இருபாலரும் ரசிக்கத் தக்க அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மரபு, நெறிகளுக்கு மதிப்பளித்து முழு குடும்பத்தையும் சந்தோஷப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளோம்.
இந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர், குவைத், மலேசியா, அரபு நாடுகள் ஆகியவற்றிலும் வேந்தர் தொலைக்காட்சியை காணலாம். எல்லா கேபிள் நெட் ஒர்க் மூலமாகவும், டிடிஎச் மூலமாகவும் நிகழ்ச்சியை பார்க்கலாம் என்றார்.

வேந்தர் தொலைக்காட்சியில் வேந்தர் வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பாகிறது. இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு திருமணம் நடத்த 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. நினைத்தாலே இனிக்கும் என்ற நிகழ்ச்சியை நடிகை குஷ்பு நடத்துகிறார்.

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வைகோ, பாரிவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்ப்பேராய விருது
 
எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா மற்றும் தினத்தந்தி முன்னாள் செய்தி ஆசிரியரும், எழுத்தாளருமான .சண்முகநாதன் எழுதிய தமிழ்நாடு-சங்ககாலம் முதல் செம்மொழி காலம் வரை என்ற புத்தக வெளியிட்டு விழா சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது.


 இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ப்பேராயம் புரவலரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தருமான பாரிவேந்தர் தலைமை தாங்கினார். தமிழ்ப்பேராயத்தின் தலைவர் மு.பொன்னவைக்கோ வரவேற்று பேசினார். மூத்த பத்திரிகையாளரும், நூலாசிரியருமான .சண்முகநாதன் முன்னிலை வகித்தார். .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
 
நிகழ்ச்சியில் தமிழ்நாடு-சங்ககாலம் முதல் செம்மொழி காலம் வரை என்ற புத்தகத்தை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் வெளியிட்டார். அதனை .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ பெற்றுக்கொண்டார்.
விருது

 அதனை தொடர்ந்து, 2014-ம் ஆண்டிற்கான தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கப்பட்டது. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது அஞ்ஞாடி என்ற நூலுக்காக பூமணிக்கு வழங்கப்பட்டது. ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது, சின்ன சின்ன வாக்கியங்கள் என்ற புத்தகத்திற்காக வெ.ஸ்ரீராமுவுக்கும், பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது, நீரிழிவுநோய் முதல் புற்றுநோய் வரை உணவு மருத்துவம் என்ற பிரிவில் டாக்டர் நரேந்திரனுக்கும் வழங்கப்பட்டது.

ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது இந்திரனுக்கும், முத்துத்தாண்டவர் தமிழிசை விருது தமிழிசை தவமணி மதுரை மாரியப்பசாமி வரலாறு புத்தகத்தை எழுதிய சோழநாடனுக்கும், வளர்தமிழ் விருது, தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு எழுதிய இளமாறனுக்கும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு பரிசு தொகையாக தலா ரூ.1½ லட்சம் வழங்கப்பட்டது.
வைகோ

 பரிதிமாற் கலைஞர் விருது பா.ரா.சுப்பிரமணியத்திற்கு வழங்கப்பட்டது. அவருக்கு பரிசு தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளர்களுக் கான பாரிவேந்தர் பைந்தமிழ் விருது அமெரிக்கா நாட்டை சேர்ந்த தமிழ் அறிஞர் ஜார்ஜ் ஹார்ட்க்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை அவர் சார்பாக மணிவண்ணன் என்பவர் பெற்றுக்கொண்டார். அவரிடம் பரிசு தொகை ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. விருதுகளை பாரிவேந்தர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வைகோ பேசும்போது, இயல், இசை, நாடகம் நம்முடன் கலந்தது. தமிழுடன் வளர்ந்தது. தமிழர்கள் பயன்படுத்திய யாழ் லண்டனில் இருக்கிறது. தமிழ் இலக்கியமும் வெளிநாட்டினரையும் கவர்ந்துள்ளது. ஜி.யு.போப் பெயரில் இங்கே விருது வழங்குகிறார்கள். ஜி.யு.போப், திருவாசகம் போல் எந்த நூலையும் பார்த்ததில்லை என்று கூறுகிறார். தமிழ் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது என்றார்.
இசைக்கல்லூரி

 எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் பேசும்போது, தமிழர்களுக்காக, தமிழுக்காக இந்த அமைப்பை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். மொத்தம் ரூ.20 லட்சம் அளவில் அதற்கான பரிசு தொகையை அறிவித்து இருக்கிறோம். பல்வேறு தமிழ் அறிஞர்களை நாங்கள் சிறப்பித்து இருக்கிறோம். பொதுவாக பல்கலைக்கழகம் என்றால் எல்லா பிரிவுகளும் இருக்க வேண்டும். நம்முடைய பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்லூரி இல்லாமல் இருந்தது. தற்போது அதையும் தொடங்கியிருக்கிறோம். நடிப்பு கல்லூரி உள்ளது. இனி வரும் காலத்தில் இசைக்கல்லூரியும் தொடங்கப்படும் என்றார்.

பாரிவேந்தர் விடுத்துள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் விடுத்துள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி வருமாறு:– சுதந்திர போராட்ட காலத்தில், மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்க விநாயகர் வழிபாட்டை பிரபலப்படுத்தியவர் பாலகங்காதர திலகர் ஆவார். மும்பை உள்ளிட்ட மகாராஷ்ட்ரத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட இவ்விழா, இந்திய ஒருமைப்பாட்டையும், ஆன்மீக வளர்ச்சியையும் வார்த்தெடுக்கும் விழாவாக இன்று வளர்ந்துள்ளது. இன்றைய நவீன உலகில், வளர்ந்து வரும் பல்வேறு துறைகளிலும் வெற்றி பெற, அறிவும் – தெளிவும் – துறைசார்ந்த ஞானமும் பெற்று தமிழக மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என விரும்பி, இத்திருநாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.