இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் விடுத்துள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி வருமாறு:–
சுதந்திர போராட்ட காலத்தில், மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்க விநாயகர் வழிபாட்டை பிரபலப்படுத்தியவர் பாலகங்காதர திலகர் ஆவார். மும்பை உள்ளிட்ட மகாராஷ்ட்ரத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட இவ்விழா, இந்திய ஒருமைப்பாட்டையும், ஆன்மீக வளர்ச்சியையும் வார்த்தெடுக்கும் விழாவாக இன்று வளர்ந்துள்ளது.
இன்றைய நவீன உலகில், வளர்ந்து வரும் பல்வேறு துறைகளிலும் வெற்றி பெற, அறிவும் – தெளிவும் – துறைசார்ந்த ஞானமும் பெற்று தமிழக மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என விரும்பி, இத்திருநாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment