Pages

Wednesday, 26 March 2014

பெரம்பலூரில் ரயில் பாதை, மருத்துவக்கல்லூரி அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்டவை அமைத்துத் தரப்படும் என்று ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி அளித்து பேசினார்.


ரயில் பாதை, மருத்துவக்கல்லூரி அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்டவை அமைத்துத் தரப்படும் என்று ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி அளித்து பேசினார்.
பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி ஆலோ சனைக் கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் வேட்பாளர் பாரிவேந்தர் பேசியதாவது : இந்தியாவில் நல்லாட்சி மலர்ந்திட வழியில்லையே எனத் தவித்தபோது மோடி  கிடைத்துள்ளார். மோடி நாட்டுக்கான தலைவராக உருவாக்கப்பட்டவரல்ல. தானாகவே உருவானத் தலைவர்.
இப்பகுதி மக்களுக்காக பல்வேறு திரு மண நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்துள்ளோம். மருத் துவ உதவிகளை செய்து கொடுத்துள்ளோம்.  பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என குரல் கொடுக்கும் இயக்கமாக ஐஜேகே விளங்கி வருகிறது. என்னைத் தேர்ந்தெடுத்தால் உங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறேன்.

பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு செல்லும் புதிய ரயில்பாதை அமைத்துத் தருகிறேன். டெல்லியில் உண்ணாவிதரம் இருந்தாவது ரயில்வே துறை அமைச்சரிடம் போராடி ரயில்பாதை அமைத்துத் தருகிறேன்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி விரைந்து தொடங்க ஏற்பாடு செய்கிறேன். அரசு மகளிர் கலைக்கல்லூரியை பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்குவேன் என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியன், மாவட்டத் தலைவர் சந்திரசேகர், தேமுதிக மாவட்ட செயலாளர் துரைகாமராஜ், ஒன்றிய செயலாளர் வாசுரவி, பாமக மாவட்ட செயலாளர் செந்தில், கண்ணபிரான், மதிமுக மாவட்ட செயலாளர் துரைராஜ், ஜெயசீலன் மற்றும் ஐஜேகே கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment