Pages

Tuesday, 11 February 2014

‘‘கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் தொகுதிகளை பா.ஜனதாவிடம் கேட்டுள்ளோம்’’ இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தகவல்

வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் தொகுதிகளை பா.ஜனதாவிடம் கேட்டுள்ளோம்’’ என்று இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

பாரிவேந்தர்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நான் குஜராத் மாநிலத்திற்கு சென்றேன். அங்கு டாஸ்மாக் கடை இல்லை. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஏராளமாக உள்ளன. சாலைகள் மிக அருமையாக உள்ளன. அங்கு இலவசங்கள் எதுவும் இல்லை. அங்கு 3–வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மோடி மிகவும் நல்லவர். நாணயமானவர். ஊழலற்ற ஆட்சியை குஜராத்தில் தந்து தொடர்ந்து முதல்வராக உள்ளார்.நான் பல கல்வி நிறுவனங்களை தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நிறுவி ஆண்டுக்கு 60 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்று தருகிறேன். இதோடு போதும் என்று நின்று விடாமல் நமது மக்களுக்கு ஏதாவது நல்லது நம்மால் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ஜனநாயக கட்சியை ஆரம்பித்தேன்.

பா.ஜனதா கூட்டணி
இன்று பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இணைந்து வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். இந்த தேர்தலில் போட்டியிட கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 2 தொகுதிகளை பா.ஜனதாவிடம் கேட்டுள்ளோம்.இவ்வாறு பாரிவேந்தர் பேசினார்.நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் டி.பி.பச்சமுத்து, அமைப்பு செயலாளர் .கே.டி.வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment