Pages

Saturday, 17 February 2024

பாராளுமன்ற உறுப்பினர், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி டாக்டர்.T.R.பாரிவேந்தர் M.P அவர்களின் அன்பு வேண்டுகோள்.

 பார்க்கவ சொந்தங்களுக்கு அன்பு வேண்டுகோள்!


அன்பார்ந்த பார்க்கவ சொந்தங்களே!

நம்முடைய பார்க்கவகுல சமுதாய மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி நம் இந்திய ஜனநாயக கட்சி (IJK).

தொடர்ந்து 3-வது முறையாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற வேட்பாளர் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பார்க்கவகுல சமுதாய வாக்குகள் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 2.80 இலட்சம் இருப்பதாக  சொல்லப்படுகிறது.

நம் சமுதாய வேட்பாளரை வெற்றி பெற வைப்பது முழுக்க முழுக்க சொந்தங்களாகிய உங்கள் கையில் இருக்கிறது.

பார்க்கவகுல சமுதாய வெற்றி என்பது, நம் இன மக்களின் ஒவ்வொரு குடும்பத்தையும் சாரும். வரும் தேர்தலில் தவறாமல் வாக்களித்து நமது சமுதாய வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது
புண்ணிய செயலாகும்.

அரசியல் அடையாளம் பெறுவதென்பது அந்த சமுதாயத்திற்கான அடையாளமாகும். இந்த முயற்சியால் நம் சமுதாயத்தில் வருங்காலங்களில் பல சட்டமன்ற உறுப்பினர்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற செய்வதன் மூலம் இந்த சமுதாயம் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க உதவும்.

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்ததில் நம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை நான் நன்றியோடு நினைவு கூறுகிறேன்.

ஆகவே.உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்குகளையும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கு அளித்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு மாநாட்டின் வெற்றி என்பது, எத்தனைபேர் இறுதிவரை கலந்து கொண்டார்கள் என்பதுதான், அந்த வகையில் மாநாட்டிற்கு வருகைதரும் அனைவரும் இறுதிவரை இருந்துபோகவேண்டும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோளாகும்.

அன்புடன்,

 (டாக்டர்.T.R.பாரிவேந்தர் M.P)

பாராளுமன்ற உறுப்பினர்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி

ஜனவரி 2024

பார்க்கவன் குரல்