Pages

Wednesday, 27 December 2023

இந்து தமிழ் திசை நாளிதழ் சார்பில் ‘சீர்மிகு பொறியாளர் விருது முனைவர் திருமுருகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது

 'இந்து தமிழ் திசை’நாளிதழ் சார்பில்‘சீர்மிகு பொறியாளர் விருது ’தொழில்நுட்பத் தலையீடு' பிரிவின் கீழ்  SRM பல்கலைக்கழக இணைஇயக்குநர்(வளாகவாழ்வு) முனைவர்  வ. திருமுருகன் அவர்களுக்கு  வழங்கப்பட்டது  என்பதனை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்.  விருது பெற்ற முனைவர்  திருமுருகன் அவர்களுக்கு பல்கலைக்கழக வேந்தர் உயர்திரு  டாக்டர் பாரிவேந்தர்  மற்றும்  இணை வேந்தர்கள்  முனைவர் ரவி பச்சமுத்து அவர்கள்  , முனைவர் சத்தியநாராயணன்  அவர்கள் ஆசி வழங்கினார்கள். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சேர்ந்த  கட்டுமானம் மற்றும் கட்டமைப்புத் துறையில் சிறந்து விளங்கும் பொறியாளர்களை கவுரவிக்கும் வகையில், ராம்கோ சூப்பர் கிரேடு சிமென்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் சார்பில் ‘சீர்மிகு பொறியாளர் விருது - 2023’ வழங்கும் விழா நடைபெற்றது.


 இந்த நிகழ்வை ரினாகான் ஏஏசி ப்ளாக்ஸ், லெட்சுமி செராமிக்ஸ், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து வழங்கின. புதுமை, தொழில்நுட்பத் தலையீடு, சுற்றுச்சூழலுக்கு உகந்தது, தொழில்முனைவு, சிறந்த ஆய்வுக்கட்டுரை ஆகிய 5 பிரிவுகளின் கீழ்விருதுகள் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த280-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் விண்ணப்பித்தனர்.


அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஏ.ஆர்.சாந்தகுமார், சென்னை சிஎஸ்ஐஆர் மைய இயக்குநர் என்.ஆனந்தவல்லி, அண்ணா பல்கலைக்கழக பூகம்பம் மற்றும் மண் கட்டமைப்பு பிரிவுத் தலைவர் கே.பி.ஜெயா,சென்னை ஐடிபிஎல், எல் அண்டு டி நிறுவன சாலைகள் மற்றும் பாலங்கள் தலைமை வடிவமைப்பாளர் ரவீந்திர சுப்பையா ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டு, 50 சிறந்த பொறியாளர்களை தேர்வு செய்தனர். விருது வழங்கும் விழா 07.12.2023 அன்று   சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  திரு , அர்ஜுனன் Director (Projects)-Chennai Metro Rail Limited  அவர்கள் விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி மற்றும்  விருதுபெற்றவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினர்.