Pages

Wednesday, 27 December 2023

இந்து தமிழ் திசை நாளிதழ் சார்பில் ‘சீர்மிகு பொறியாளர் விருது முனைவர் திருமுருகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது

 'இந்து தமிழ் திசை’நாளிதழ் சார்பில்‘சீர்மிகு பொறியாளர் விருது ’தொழில்நுட்பத் தலையீடு' பிரிவின் கீழ்  SRM பல்கலைக்கழக இணைஇயக்குநர்(வளாகவாழ்வு) முனைவர்  வ. திருமுருகன் அவர்களுக்கு  வழங்கப்பட்டது  என்பதனை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்.  விருது பெற்ற முனைவர்  திருமுருகன் அவர்களுக்கு பல்கலைக்கழக வேந்தர் உயர்திரு  டாக்டர் பாரிவேந்தர்  மற்றும்  இணை வேந்தர்கள்  முனைவர் ரவி பச்சமுத்து அவர்கள்  , முனைவர் சத்தியநாராயணன்  அவர்கள் ஆசி வழங்கினார்கள். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சேர்ந்த  கட்டுமானம் மற்றும் கட்டமைப்புத் துறையில் சிறந்து விளங்கும் பொறியாளர்களை கவுரவிக்கும் வகையில், ராம்கோ சூப்பர் கிரேடு சிமென்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் சார்பில் ‘சீர்மிகு பொறியாளர் விருது - 2023’ வழங்கும் விழா நடைபெற்றது.


 இந்த நிகழ்வை ரினாகான் ஏஏசி ப்ளாக்ஸ், லெட்சுமி செராமிக்ஸ், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து வழங்கின. புதுமை, தொழில்நுட்பத் தலையீடு, சுற்றுச்சூழலுக்கு உகந்தது, தொழில்முனைவு, சிறந்த ஆய்வுக்கட்டுரை ஆகிய 5 பிரிவுகளின் கீழ்விருதுகள் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த280-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் விண்ணப்பித்தனர்.


அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஏ.ஆர்.சாந்தகுமார், சென்னை சிஎஸ்ஐஆர் மைய இயக்குநர் என்.ஆனந்தவல்லி, அண்ணா பல்கலைக்கழக பூகம்பம் மற்றும் மண் கட்டமைப்பு பிரிவுத் தலைவர் கே.பி.ஜெயா,சென்னை ஐடிபிஎல், எல் அண்டு டி நிறுவன சாலைகள் மற்றும் பாலங்கள் தலைமை வடிவமைப்பாளர் ரவீந்திர சுப்பையா ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டு, 50 சிறந்த பொறியாளர்களை தேர்வு செய்தனர். விருது வழங்கும் விழா 07.12.2023 அன்று   சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  திரு , அர்ஜுனன் Director (Projects)-Chennai Metro Rail Limited  அவர்கள் விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி மற்றும்  விருதுபெற்றவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினர். 

Sunday, 20 August 2023

செய்திகள் இன்று

07:19
Short and propeller. 

நார்வேயின் பிரான்சியம் நகரில் நடைபெறும் இடம் மற்றும் வர்த்தக கண்காட்சியில் இந்திய குழுவினர் கலந்து கொள்கிறார்கள் மீன் வளர்ப்பு தொழில்நுட்பம் லாபகரமான மீன் வளர்ப்பு புதிய உத்திகள் மீன்களுக்கான உணவு சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்திய குழுவினர் நார்வே நாட்டில் மீன்வள தொழில்நுட்ப நிபுணர்களுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் நார்வேயில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் அமைச்சர் தலைமையிலான குழுவினர் கலந்துரையாட உள்ளனர் கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியா நார்வே இடையே மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்புத் துறையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய குழு நார்வே செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது ஆகாச வாணியும் செய்தி அறிக்கை 

 சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 250 இரண்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நெல்லை பாளையங்கோட்டையில் அவரது மணி மண்டபத்தில் மாநில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது அமைச்சர் தங்கம் தென்னரசு திருமதி வேந்தன் சட்டப்பேரவை தலைவர் திரு அப்பாவும் மாவட்ட ஆட்சியர் திரு கார்த்திகேயன் ஆகியோர் ஒண்டிவீரன் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள் மாநில தலைவர் திரு அண்ணாமலை மற்றும் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தினர் தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் திரு துரை ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மக்கள் நலனை முன்னிறுத்தியே பிரதமர் திரு மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக பிஜேபி மாநில தலைவர் திரு அண்ணாமலை கூறியுள்ளார் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் நடை பயணத்தை மேற்கொண்டவர் நோட்டில் அனைத்து மாநிலங்களிலும் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார் ஆளும் திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்று கூறிய திரு அண்ணாமலை விவசாயத்திற்கான பாசனத் திட்டங்களை மேற்கொள்ளவில்லை என்றும் கூறினார் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் திருஅண்ணாமலை கூறினார்