Pages

Monday, 22 July 2019

பாரிவேந்தர் பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் அலுவலகம் தொடக்கம்

பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் பெரம்பலூரையும் , திருச்சி, அரியலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றார். இதன் மூலம் வேளாண் விளைபொருட்களை அருகிலுள்ள நகரங்களுக்கு கொண்டு சென்று விற்க விவசாயிகளுக்கு வழி கிடைக்கும் என குறிப்பிட்டார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பாரிவேந்தர் M.P சனிக்கிழமை கூறியது:  மத்திய அரசு மாநிலங்களின் மீது ஹிந்தி மொழி திணிப்பது என்பது மாநில கொள்கைகளுக்கு எதிரானது. புதிய கல்விக் கொள்கை தமிழக மக்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதே தமிழக மக்களின் கருத்து என்பதால் அதை மறுத்து பேச விரும்பவில்லை. மக்கள், புதிய கல்விக் கொள்கையை விரும்பவில்லை என்பதே உண்மை. தேசிய புலனாய்வு முகமை சோதனை குறித்து மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்
பெரம்பலூர் பகுதியில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். மக்களின் தண்ணீர் பற்றாக் குறையை போக்குவதற்கு சொந்த செலவில் தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், முசிறியில் ஆழ்துளை கிணறு அமைத்து மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. பெரம்பலூர் விவசாயிகள் நிறைந்த தொகுதி என்பதால் அவர்கள் விளைவித்த பொருள்களை விற்பனை செய்யும் வரை அதனை பாதுகாப்பாக வைக்க குளிர்பதன கிடங்குகள் அமைத்து தருவதற்கு மக்களவையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட்டில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு மக்களின் குறைகள் தொடர்ந்து கேட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.  முன்னதாக, பெரம்பலூர்  மக்களவைத் தொகுதிக்குள்பட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.



Sunday, 7 July 2019

பெரம்பலூர் தொகுதி 300 மாணவர்களுக்கு இலவச இலவச உயர்கல்வி டாக்டர் பாரிவேந்தர் எம்பி

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் பெரம்பலூர் தொகுதி 300 மாணவர்களுக்கு  இலவச உயர்கல்வி டாக்டர் பாரிவேந்தர் எம்பி ஏற்பாடு 

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த 300 மாணவ மாணவியர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கட்டணமின்றி  இலவச உயர்கல்வி பயிலுவதற்கான அனுமதி தொகுதி எம்பியும் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் வேந்தருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் வழங்கினார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விபயில வாய்ப்பில்லாத பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவ மாணவியர் 300 பேருக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கட்டணமின்றி உயர்கல்வி பயிலுவதற்கான அனுமதியை நிறுவனத்தின் வேந்தரும் பெரம்பலூர் எம்பியுமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் வழங்கினார். இலவச உயர்கல்வி வாய்ப்பு பெறும் மாணவ மாணவியர் பட்டியலை எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் நடந்த எளிய நிகழ்ச்சியில் துணைவேந்தர் முனைவர் சந்திப் சன்சேத்தியிடம் வழங்கினார்.

பின்னர் இது சம்மந்தமாக டாக்டர் பாரிவேந்தர் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது 

என்னை பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதினேன் அதுவும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைத்தபோது உருவானது இலவச உயர்கல்வி வழங்குவது என்ற திட்டமாகும்.பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உயர்கல்வி பயில வாய்ப்பிருந்தும் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரிக்கு செல்ல முடியாதவர்களுக்கு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் இலவசமாக அந்த வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி இந்த வாய்ப்பை பெற 1,500 பேர் விண்ணபித்தனர் அவர்களது விண்ணப்பங்களை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டபின் தகுதியுள்ள 300 மாணவ மாணவியர் இலவச உயர்கல்விக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளான குளித்தலையில் 47லால்குடியில் 47 மணச்சநல்லூரில் 29 முசிரியில்37
 பெரம்பலூரில் 95 துறையூரில் 45மாணவ மாணவியர 154மாணவியர் 146 மாணவர் என 300 பேருக்கு படிப்பு கட்டணம் விடுதி கட்டணம் உணவு கட்டணம் ஆகிய அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் பயிலுபவர்களில் 10சதவிதமான 7000 மாணவமாணவியர் இலவசகல்வி பயிலுகையில் பெரம்பலூர் தொகுதிக்கு மட்டும் இந்த வாய்ப்பு ஏன் என்று நீங்கள் கேட்கலாம்.நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு அதிகமாக வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இதனை நான் செயல்படுத்துகிறேன்.இந்த வாய்ப்பு ஆண்டு தோறும்  தொடர்ந்து அந்த தொகுதி மாணவ மாணவியருக்கு கிடைக்கும் .

எந்த திட்டம் செயல்படுத்தினாலும் கல்வி வழங்கும் திட்டம் நிலையானது நாட்டின் சமுதாயத்தின்  வளர்ச்சிக்கு வழிவகுக்க கூடியது .எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் இலவச உயர்கல்வி வாய்ப்பளிக்கப்பட்டுள்ள மாணவ மாணவியர் படிப்பு காலத்தை முடித்து செல்லும்போது தரமான மாணவர்களாக மட்டுமின்றி வேலை வாய்ப்பு வசதியுடன்  செல்லும் வகையில் அவர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் சந்தீப் சன்சேத்தி இணை துணைவேந்தர்கள் முனைவர் டி.பி.கணேசன், முனைவர் பாலசுப்ரமணியன், மாணவர் சேர்க்கை இயக்குநர் முனைவர் டி.வி.கோபால் தேர்வு கட்டுபாட்டாளர் எஸ்.பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்