Pages

Wednesday, 3 November 2010

பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் துவக்கவிழா


பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் 31.10.2010 அன்று திருச்சி மாவட்டம், இருங்களூரில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமையில் துவக்கவிழா நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பார்க்கவகுல சங்கத்தின் 840 பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட, வட்ட, கிளை நிர்வாகிகள் சுமார் 4,600 பேர் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் நிறுவனராகக் கொண்டு இச்சங்கம் உருப்பெற்றது. 

பார்க்கவகுல சங்கம் தோன்றியதன் 100-ஆம் ஆண்டு விழாவினையும், பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் 2-ஆம் ஆண்டு விழாவினையும் ஒன்றாக இணைத்து 2012 ஏப்ரல் 28 ல் விழுப்புரம் மாவட்டம் - உளுந்தூர்பேட்டையில் மிக பெரிய அளவில் மாநாடாக கொண்டாடப்பட்டது, அதில் பல லட்சம் பார்க்கவச் சொந்தங்கள் பங்கேற்று, சிறப்பான வகையில் மாநாடு நடந்தது. அதில் வெளியிடப்பட்ட மாநாட்டு சிறப்பு மலரில் பார்க்கவகுலம் தோன்றிய வரலாறு, 100 ஆண்டுகளில் சங்கத்தின் வளர்ச்சி, அதற்காக பாடுபட்ட வெவ்வேறு தலைவர்களின் கடின உழைப்பு மற்றும் சங்கத்திற்காக ஆற்றிய தொண்டினையும் விரிவாக கான முடியும்.